பாஜகவை வீழ்த்துவது வரலாற்றுக் கடமை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சூளுரை
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது நம்முடைய வரலாற்றுக் கடமை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி வெளியிட்ட அறிக்கையில், “அடிமைகளிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுத்த நாம், அவர்களின் எஜமானர்களிடம் இருந்து இந்தியாவை மீட்கும் முனைப்பில் 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்கிறோம்.
சூழ்ச்சி மற்றும் பொய்களின் மூலம் தங்களை தக்கவைத்துக் கொள்ள நினைக்கும் ஆதிக்கவாதிகளை மக்களிடம் அம்பலப்படுத்தி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களை வீழ்த்துவது நம்முடைய வரலாற்றுக் கடமை. அதற்கான முன்னேற்பாட்டுப் பணியாக, திமுக நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வைக்குழு சார்பில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கான பொறுப்பு அமைச்சர் – மாவட்டக் கழக செயலாளர்கள், ஒன்றிய நகர – பகுதி – பேரூர் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் அண்ணா அறிவாலயம் – கலைஞர் அரங்கத்தில் இன்று ஆலோசனை நடத்தினோம்.
இன்னும் சில நாட்களில் எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுக உருவாகும்: ஓபிஎஸ்
தொகுதியின் களநிலவரம், குறுகிய காலத்தில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்து, மகத்தான வெற்றியை திமுக தலைவர்
அவர்களிடம் சமர்ப்பிக்க அனைத்து வகையிலும் உழைத்திடுமாறு கேட்டுக்கொண்டோம்” என தெரிவித்துள்ளார்.