சொத்துக்கள் முடக்கம்.? எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.! உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை விளக்கம்.!
அமலாக்கத்துறை முடக்கியதாக கூறும் சொத்துக்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை விளக்கம் அளித்துள்ளது.
அண்மையில் அமலாக்க துறையினர் தங்களது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் 36.3 கோடி ரூபாய் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டதாகவும். வங்கி கணக்குகளில் உள்ள 34 லட்ச ரூபாய் முடக்கப்பட்டதாகவும் தெரிவித்து இருந்தனர்.
தற்போது இந்த செய்தியை உதயநிதிஸ்டாலின் அறக்கட்டளை மறுத்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பாக அதன் முக்கிய நிர்வாகி பி.கே.பாபு இந்த அறிக்கையை தற்போது வெளியிட்டு உள்ளார். அதில் தங்களிடம் 36.3 கோடி அளவிற்கு எந்த ஆசையா சொத்துக்களும் இல்லை. அமலாக்துறை முடக்கியதாக கூறப்படும் சொத்துகளுக்கும் எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அமலாக்கத்துறை முடக்கியது எங்களது வங்கி கணக்கில் உள்ள 34 லட்சம் ரூபாய் பணத்தை மட்டுமே. அதனையும் தகுந்த ஆதாரங்களைக் கொண்டு மீட்டெடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையானது மக்கள் வாழ்வாதாரத்தை முன்னிறுத்தி களப்பணி மேற்கொண்டு வருகிறது. இதன் அலுவலகம் சென்னை டி-நகரில் செயல்பட்டு வருகிறது. முறையாக மத்திய அரசு அங்கீகாரம் பெறப்பட்டு, வருமான வரி கணக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை மூலமாக கல்வி, மருத்துவ படிப்பிற்கும் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. நடமாடும் நூலகம், பூங்காக்கள் சீரமைப்பு, தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்குவது என மக்கள் நல பணிகளில் ஈடுபட்டு வருகிறோம் எனவும் அந்த அறிக்கையில் விளக்கத்தை அளித்துள்ளது உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை.