வாரிசு படத்தில் உண்மையில் உதயநிதி ஸ்டாலின் தான் நடிக்க வேண்டும் – செல்லூர் ராஜு

Default Image

நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வரவுள்ள வாரிசு திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலில் தான் உண்மையில் நடித்திருக்க வேண்டும் என செல்லோர் ராஜு விமர்சனம். 

மதுரையில் அதிமுகவின் 51 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் திமுகவில் இருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்ட பின்பு அதிமுக உருவான வரலாறு அனைவருக்குமே தெரியும். 50 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சியாக அதிமுக திகழ்வதோடு, இது மக்களுக்கான இயக்கமாகவும் திகழ்ந்து வருகிறது.

எம்ஜிஆருக்கு பின் அதிமுக அழிந்து விடும் என்று கலைஞர் உட்பட அனைவரும் நினைத்தார்கள் ஆனால் இன்றைக்கும் அத்தகைய சோதனை தான் நடக்கிறது. எப்போது ஸ்டாலின் போவார், எடப்பாடி எப்போது வருவார், விடியல் தருவார் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் தெரிவித்துள்ளார்.

மேலும் நிதியமைச்சர் டான் என்றால் நாங்கள் சூப்பர் டான் தான். தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்திவிட்டு காரணம் சொல்கிறார்கள். அதற்கு நிதி அமைச்சர் தேவையே இல்லை அதிகாரியே போதும் நிதியமைச்சர் நீண்ட நாட்களுக்கு பதவியில் இருக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு நிதியமைச்சர் தான் ஆபத்து என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வரவுள்ள வாரிசு திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலில் தான் உண்மையில் நடித்திருக்க வேண்டும். கதை கலைஞர் எழுதியிருக்க வேண்டும். திரைக்கதை ஸ்டாலின் ஆக தான் இருந்திருக்க வேண்டும் என விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்