சிறந்த ஆடை அணிந்த வீரர்களுக்கான விருதினை வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்..!
சிறந்த ஆடை அணிந்த வீரர்களுக்கான விருதினை உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
மாமல்லபுரத்தில் 12 நாட்களாக நடைபெற்று வந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, கண்கவர் நிகழ்ச்சிகளுடன் நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகளமாக நிறைவு பெறுகிறது. இந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், சிறந்த ஆடை அணிந்த வீரர்களுக்கான விருதினை உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். அங்கோலா, ஸ்விட்சர்லாந்து, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளுக்கு சிறந்த ஆடை அணிந்ததற்கான விருதும், ஸ்டைலிஷ் உடை அணிந்ததற்கு டென்மார்க் நாட்டை சேர்ந்த அணியினருக்கும் வழங்கியுள்ளார்.