“முதலமைச்சர் கோப்பை., 11.53 லட்சம் வீரர்கள்., ரூ.35 கோடி பரிசு.,” உதயநிதி பெருமிதம்.!
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 'முதலமைச்சர் கோப்பை' விளையாட்டு போட்டிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை : மாநில அளவில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கப்பட்டன. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இந்த போட்டிகள் வரும் அக்டோபர் 24 வரை நடைபெற உள்ளது. முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் இந்தாண்டு 11.5 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். இதன் தொடக்க நிகழ்வு இன்று சென்னை நேற்று உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியது.
துணை முதலமைச்சரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், ‘முதலமைச்சர் கோப்பை’ விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் ரகுபதி, திமுக எம்பி தயாநிதி மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.
போட்டிகளை தொடங்கி வைத்த பிறகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ” கடந்த ஆண்டு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் 3.5 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்தாண்டு 11.53 லட்சம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டிகளில் பள்ளி கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் , மாற்றுத்திறனாளிகள் , பொதுமக்கள் என பல்வேறு பிரிவில் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இத்தனை லட்சம் விளையாட்டு வீரர்கள் இந்த போட்டியில் பங்கு பெறுகிறார்கள் என்றால் அத்தனை சிறப்புடன் விளையாட்டு துறை செயல்பட்டு வருகிறது என்பதற்கு இதுதான் சிறந்த ஒரு எடுத்துக்காட்டு. இநதாண்டு ‘முதலமைச்சர் கோப்பை’ நடத்துவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.82 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இதில் பரிசுத்தொகை மட்டுமே ரூ.35 கோடியாகும். இந்தியாவிலேயே இத்தனை கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து வருடா வருடம் விளையாட்டு போட்டிகள் நடத்தும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான்.
உங்களுடைய கோரிக்கைகளை ஏற்று முதலமைச்சர் கோப்பைகளில் ஹேண்ட்பால், கேரம், செஸ், பாக்ஸிங், கோகோ, டிராக் சைக்கிள் பந்தயம் என பல்வேறு புதிய விளையாட்டு போட்டிகளை சேர்த்துள்ளோம். முதலமைச்சர் கோப்பையில் பங்கேற்க வந்துள்ள நீங்கள் அனைவரும் வரலாற்றில் இணைந்துள்ளீர்கள். விளையாட்டை நம்பி, களம் நமக்கானது என்று வந்துள்ள உங்கள் கனவுகளுக்கு நம்முடைய திராவிட மாடல் கழக அரசு என்றும் துணை நிற்கும். விளையாட்டு வீரர்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் 33 விளையாட்டு போட்டிகளுக்கு தேவையான ‘கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்’ தரும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இதுவரை 23 மாவட்டங்களுக்கு நான் ஸ்போர்ட்ஸ் கிட் வழங்கி உள்ளேன். தமிழ்நாடு சேம்பியன் அறக்கட்டளை ,மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நூற்றுக்கும் அதிகமான வீரர் , வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி வருகிறோம். விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கி வருகிறோம்.
விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் மாநிலமாக நமது தமிழ்நாடு மாறி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான் பாரிசீஸ் பாராலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாட்டில் இருந்து துளசி உட்பட ஆறு மாற்றுத்திறனாளி வீரர்கள் சென்றார்கள். அவர்களுக்கு தலா ஏழு லட்சம் ரூபாயை தமிழ்நாடு முதலமைச்சர் ஊக்கத்தொகையாக விளையாட்டுப் போட்டிகளுக்கு செல்வதற்கு முன்பாகவே வழங்கினார். சென்ற 6 பேரில் 4 பேர் பதக்கங்களோடு திரும்பி வந்தனர். நமக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்தனர்.
உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் பதக்கங்கள் வென்ற குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி, ஸ்ரீநாத் நாராயணன் போன்ற வீரர்களுக்கு நம்முடைய முதலமைச்சர் மொத்தமாக ஒரு கோடி ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கினார்கள். ஒரு பக்கம் நமது வீரர்கள் சர்வதேச போட்டிகளில் சாதனை படைத்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் தமிழக அரசு சர்வதேச போட்டிகள் நடத்தி சாதனை படைத்து கொண்டிஇருக்கிறது. அதற்கு சின்ன உதாரணம் சென்னையில் நடைபெற்ற பார்முலா போர் கார் பந்தயம்.
முதலமைச்சர் கோப்பை போட்டிகள் தொடரில் ஒவ்வொருவருடைய பங்களிப்பும் மிக முக்கியம். முதலமைச்சர் கோப்பை மட்டுமல்லாது வருங்காலத்தில் தேசிய மாநில அளவிலான போட்டிகளிலும் நுழையப் போகும் நமது நாட்டினுடைய வீரர்கள் உங்கள் அத்தனை பேருக்கும் பாராட்டுகளையும் நாம் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் கோப்பை தொடக்க நிகழ்வில் உரையாற்றினார்.