சொந்த கட்சி பிரச்சனைக்காக பிரதமர் மோடியை அதிமுகவினர் சந்திக்கின்றனர்.! அமைச்சர் உதயநிதி விமர்சனம்.!
அதிமுகவின் தங்கள் உட்கட்சி பிரச்சனையை பேசுவதற்கே பிரதமரை சந்திக்கின்றனர் என உதயநிதி ஸ்டாலின் நேற்று நடைபெற்ற விழாவில் பேசியுள்ளார்.
நேற்று கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு வளாகத்தில் ஒன்றியமும், மாநிலங்களும் எனும் தலைப்பின் கீழ் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டி நடந்த விழாவில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்ரமணியன், திமுக எம்பி இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இபிஎஸ் :
இந்த விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிமுக மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி தனது விமர்சனங்களை முன்வைத்தார். அவர் கூறுகையில், அதிமுகவினர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசுவது, தங்கள் உட்கட்சி பிரச்சனை பற்றி ஆலோசிப்பதற்காக மட்டுமே என குற்றம் சாட்டினார். மேலும், ஜெயலலிதா இருந்த வரையில் அதிமுகவின் நிலைமை வேறு என்றும், தற்போது அது வேறு மாதிரி இருக்கிறது என்றும் விமர்சித்தார்.
ஜெயலலிதா :
மேலும் அவர் பேசுகையில், முன்னதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை தமிழகம் என மாற்றிவிடுமாறு கூறி இருந்தார். தற்போது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இருந்து இருந்தால், தமிழ்நாட்டின் பெயரையே மாற்றி இருப்பார். எனவும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எப்போதும் பேசுகையில், எனக்கு எதிரிகள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் இல்லை என கூறுவார் . ஆனால் எதிரிகள் எல்லாம் அவருக்கு பின்னால் இருந்துள்ளனர் எனவும் அமைச்சர் உதயநிதி விமர்சனம் செய்தார். .
நீட் தேர்வு :
மேலும் அவர் பேசுகையில், பிரதமர் மோடியை தான் சந்தித்து பேசுகையில், தமிழகத்தில் விளையாட்டு துறை மேம்பாடு பற்றி ஆலோசித்ததாகவும், தமிழ்கத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு குறித்து பேசியதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார்.