திருவாரூர் களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்…போட்டியிட விருப்பமனு அளிக்கப்பட்டுள்ளது..!!
திருவாரூர் இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டுமென்று விருப்ப மனு அளிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி மறைவால் காலியான திருவாரூர் தொகுதி:
திருவாரூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக இறந்தார்.இந்நிலையில் அந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் சூழ்நிலை இருந்தது.
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு :
பின் ஜனவரி 28-ஆம் தேதி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 10ம் தேதி தொடங்கும்.அதேபோல் ஜனவரி 31-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இடைத்தேர்தலுக்கான மனுதாக்கல் ஜனவரி 3-ஆம் தேதியும், மனுதாக்கல் செய்ய இறுதி நாள் ஜனவரி 10-ஆம் தேதி என்றும், ஜனவரி 11-ஆம் தேதி முதல் வேட்பு மனுக்களை பெறலாம் என்றும், மனுக்களை திரும்பப் பெற ஜனவரி 14-ஆம் தேதி இறுதி நாள் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று திமுக சார்பில் போட்டியிட வழங்கப்பட்ட விருப்ப மனுவில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் , முக.ஸ்டாலின் பூண்டி கலைவாணன் போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனு அளிக்கப்பட்டுள்ளனர்.இறுதியாக யார் வேட்பாளர் என்று நாளை தெரிவிக்கப்படும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.