கள்ளக்குறிச்சி : மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் உடல்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை 38 பேர் உயிரிழந்ததாக வெளியான தகவல் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், பலர் கள்ளக்குறிச்சிக்கு நேரில் வந்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆறுதலை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி, பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கள்ளக்குறிச்சி வந்து அஞ்சலி செலுத்தினர்.
அத்துடன் மேலும் மருத்துவமனையில் இருப்பவர்களையும் நேரில் சந்தித்து அவர்களுடைய நலம் பற்றியும் விசாரித்தனர். அவர்களை தொடர்ந்து விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விஷச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து அவர்களுடைய நலம் விசாரித்தார்.
அதனை தொடர்ந்து, விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின்
உடல்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்துவிட்டு அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அத்துடன், இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணமும் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அந்த நிவாரண தொகைக்கான காசோலையையும், அஞ்சலி செலுத்துவிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வழங்கினார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…