உத்தவ் தாக்கரே vs ஏக்நாத் ஷிண்டே.! சிவசேனா கட்சி விவகாரம்.! உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை.!
சிவசேனா கட்சி சின்னமான வில் அம்பு சின்னம் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதை எதிர்த்து உத்தவ் தாக்ரே தொடுத்த வழக்கு இன்று உச்சநீத்திமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
தமிழத்தில் எப்படி அதிமுக கட்சியானது எடப்பாடி பழனிசாமி அணி – ஓ.பன்னீர்செல்வம் அணி என பிரிந்து எடப்பாடி பழனிசாமி பக்கம் அதிக எம்எல்ஏக்கள் இணைந்து ஆட்சி அமைக்கப்பட்டதோ அதே போல மகாராஸ்டிராவிலும் தற்போது சிவசேனா கட்சியின் அரசியல் களம் மிகவும் பரபரப்பாகி கொண்டே வருகிறது.
பாஜக பிரிவு – ஆதரவு : அங்கு பாஜக ஆதரவுடன் ஆட்சியில் இருந்த சிவசேனா கடந்த தேர்தலில் பாஜக கூட்டணியை முறித்து காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சி அமைத்தது. உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார் . அதன் பிறகு சிவசேனா கட்சியில் குழப்பம் ஏற்பட்டு ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இரண்டாக பிரிந்து அதிக எம்எல்ஏக்கள் ஷிண்டே பக்கம் இருந்ததால், பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஏக்நாத் ஷிண்டே மஹாராஷ்டிரா முதல்வராக பொறுப்பேற்றார்.
வில் அம்பு சின்னம் : இதற்கிடையில் சிவசேனா கட்சி சின்னமான வில் அம்பு சினம் முடக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து அண்மையில் இந்திய தேர்தல் ஆணையம், சிவசேனா கட்சி சின்னமாக வில் அம்பு சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே அணிக்கு ஒதுக்கியது.
உச்சநீதிமன்ற வழக்கு : இந்த தேர்தல் ஆணைய நடவடிக்கையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தது போல , உத்தவ் தாக்கரே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த சிவசேனா கட்சி வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு வழக்கை விசாரித்து வருகிறது.