“சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி வெற்றி”- போஸ்டர் ஓட்டியதால் ஏற்பட்ட பரபரப்பு!
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதாக போஸ்டர் ஓட்டியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 2-ம் தேதி நடைபெற்ற நிலையில், தற்பொழுது வாக்கு எண்ணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி இதுவரை 148 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதனைதொடர்ந்து அதிமுக, 85 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
அந்தவகையில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 52,106 வாக்குகள் பெற்று, 36,933 வித்தியாசத்தில் முன்னணி வகிக்கிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் களம்கண்ட பாமக வேட்பாளர் கஸ்ஸாலி, 15,173 வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளார்.
மேலும் உதயநிதி ஸ்டாலின் தனது முதல் தேர்தலிலே பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வரும் நிலையில், அவர் வெற்றி பெற்றுள்ளதாக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதாக திமுகவினர் போஸ்டர் ஓட்டினார்கள். இந்த போஸ்டரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.