உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை என வெளியான தகவல் தவறானது என கே.என் நேரு தெரிவித்தார்.
அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த கே.என் நேரு, ஆர்.எஸ் பாரதி, 2 நாட்களில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடியும். இன்னும் இரண்டு அல்லது மூன்று கட்ட பேச்சு வார்த்தைகளில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும். பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக போட்டியிடும் என கே.என் நேரு, ஆர்.எஸ் பாரதி கூட்டாக பேட்டியளித்தனர். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 7 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். எத்தனை தொகுதிகளில் திமுக போட்டியிடும் என்பது பற்றிய மு.க ஸ்டாலின் அறிவிப்பார். தனிச் சின்னம் தொடர்பான விவகாரம் எங்களுக்கு கூட்டணி கட்சிகளுக்கும் உள்ள பிரச்சனை. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் சின்னம் குறித்து ஸ்டாலின் உடன் கூட்டணி கட்சி தலைவர்கள் பேசுவார்கள்.
உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை என வெளியான தகவல் தவறானது என கே.என் நேரு தெரிவித்தார். வன்னியர்களுக்கான தற்காலிக உள்ஒதுக்கீடு தேர்தலுக்காகவே செய்யப்பட்டது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிக இடங்களை கேட்பதில் தவறில்லை. விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போதே வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு தருவதாக திமுக உறுதியளித்தது என கே.என் நேரு தெரிவித்தார்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…