இன்று அமைச்சராக பதவியேற்கிறார் உதயநிதி..!

Default Image

இன்று அமைச்சராக பதவியேற்கிறார் உதயநிதி ஸ்டாலின். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பில் வந்த ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் இருக்கிறது. இந்த நிலையில், இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

அந்த வகையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழாவுக்காக பிரமாண்டமான முறையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பதவியேற்பு விழாவுக்கு அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்