விரைவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவார் – அமைச்சர் மூர்த்தி
உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நிச்சயமாக அமைச்சராவார் என உதயநிதி பேட்டி.
மதுரையில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.அப்போது பேசிய அவர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நிச்சயமாக அமைச்சராக வருவார்.
அவர் தனது தொகுதி மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். சட்டமன்ற உறுப்பினராக தனது பணியை மிகவும் சிறப்பாக செய்துவரும் நிலையில், இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலமாக இருப்பார். அவர் கண்டிப்பாக விரைவில் அமைச்சராவார் என்று தெரிவித்துள்ளார்.