சட்டத்தை மீறி உதயநிதி தூத்துக்குடி பயணம் -அமைச்சர் ஜெயக்குமார்.!
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கொரோனா பாதிப்பு தொடர்பாக ஒளிவு மறைவின்றி கணக்கு கொடுக்கப்படுகிறது. திருச்சி, திருவண்ணாமலை மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் பெறாமல் சட்டத்தை மீறி தூத்துக்குடி சென்றுள்ளார். இது சமுதாய பிரச்னை என்பதால் முறையாக அனுமதி பெற்று செல்ல வேண்டும், இதற்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், தனியார் நிறுவனங்கள் ஆள் குறைப்பு நடவடிக்கை எடுப்பது மனிதாபிமானமற்ற செயல் என்று அவர் தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் வீட்டிற்கு சென்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் கூறினாா் என்பது குறிப்பிடத்தக்கது.