#BREAKING: உதயநிதி ஸ்டாலினின் மொத்த சொத்து ரூ.28.54 கோடி..!
திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் மொத்த சொத்து ரூ.28.54 கோடி என தெரியவந்துள்ளது.
திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடவுள்ளார். இதற்காக இன்று உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார். அதில், அசையும் சொத்து தற்போது ரூ.22.28 கோடி எனவும், அசையா சொத்து தற்போது ரூ.6.54 கோடி எனவும் இதனால் உதயநிதி ஸ்டாலினின் மொத்த சொத்து ரூ.28.54 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரூ.1.35 லட்சம் கடன் உள்ளதாக தனது வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.