உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்பது புதிய திராவிட மாடலாக இருக்கலாம் – தமிழிசை
புதுச்சேரியில் எந்த அடக்குமுறையும் இல்லை துணை நிலை ஆளுநர் என்ற முறையில் அரசுக்கு துணையாக இருக்கின்றேன் என தமிழிசை பேட்டி.
திமுக ஆட்சி பொறுப்பில் வந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் நாளை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அந்த வகையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.
இதுகுறித்து விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், ஆளுநர் தமிழிசை, புதுச்சேரியில் நல்ல ஆட்சி நடந்து கொண்டுள்ளது. புதுச்சேரிக்கு இப்போது தேவை திராவிட மாடல் ஆட்சி அல்ல புதுச்சேரிக்கு விமான நிலையம் கட்ட 300 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கொடுக்கட்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், புதுச்சேரியில் எந்த அடக்குமுறையும் இல்லை துணை நிலை ஆளுநர் என்ற முறையில் அரசுக்கு துணையாக இருக்கின்றேன். புதுச்சேரியில் பொம்மை ஆட்சி நடைபெறுகின்றது என்று ஸ்டாலின் சொன்னார். உண்மைதான் அது புதுச்சேரியில் இல்லை கர்நாடாகாவில் நடந்து கொண்டிருக்கின்றது என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, அது தான் புது மாடலோ என்னவோ, நாங்கலெல்லாம் 25 வருடம் கஷ்டப்பட்டு உழைத்து இந்த நிலைக்கு வந்துள்ளோம் வாரிசு இல்லாமல் என்று என தெரிவித்துள்ளார்.