அண்ணன் விவேக் விரைவில் குணமடைய வேண்டுமென விரும்புகிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றானது வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இதனை தொடர்ந்து,நடிகர் விவேக் சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவ மனையில் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இதனையடுத்து,இன்று மதியம் திடீரென்று நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.மேலும்,இதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாட்டை சரி செய்ய ‘எக்மோ’ கருவியும் பொருத்தப்பட்டு சிகிச்சையானது வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நடிகர் விவேக் விரைவில் குணமடைய வேண்டும் என்று தமிழக முதல்வர். எடப்பாடி பழனிசாமி,துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்,கவிஞர் வைரமுத்து மற்றும் திரைப்பிரபலங்கள் போன்ற பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து,நடிகர் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,”உடல்நலம் குன்றி சிகிச்சையில் இருக்கும் சின்னக்கலைவாணர் அண்ணன் விவேக் அவர்கள் நலம்பெற்று விரைவில் வீடு திரும்ப விரும்புகிறேன்.அன்போடு பழகுவதிலும்,சமூக சிந்தனையுடன் செயல்படுவதிலும் அண்ணனுக்கு நிகர் அவரே.அண்ணன் அவர்கள் மீண்டு வந்து தமிழக மக்களை சிரிக்க,சிந்திக்க வைக்கட்டும்”, என்று கூறியுள்ளார்.
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…