சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு நன்றி தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு நன்றி தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்.
சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் இருவரும் காவல்நிலையத்தில் போலீசாரால் தாக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். இவர்களது மரணத்திற்கு பிரபலங்கள் பலரும் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து, நடிகர் ரஜினிகாந்த் இன்று கருது தெரிவித்திருந்த நிலையில், இதனை குறிப்பிட்டு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ‘பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி கிடைக்க தமிழக முதல்வரை எழுப்பும் தலைவர் மு.க.ஸ்டாலினின் தொடர் முயற்சியில் இணைந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நன்றி.’ என தெரிவித்துள்ளார்.