சென்னை: மகளிருக்கான தமிழக அரசின் புதிய திட்டமான TN-RISE நிறுவனத்தை தொடங்கினர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
மகளிர் தொழில் முனைவோர் நலன் கருதி அவர்களுக்கு தேவையான தொழில் உதவிகளை வழங்கும் வகையில் புதிய திட்டம் தொடங்கப்படும் என்று கடந்த ஆண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்து இருந்தார். அதன் தொடர்ச்சியாக இன்று சென்னையில் TN-RISE எனும் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
TN-RISE என்பது தமிழ்நாடு ஊரக தொழில் காப்பு புத்தெழில் உருவாக்க நிறுவனம் ஆகும். இந்த நிறுவனமானது அரசின் ஆதரவுடன், தனியார் நிதி நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், சிறுகுறு தொழில் அமைப்புகள், உற்பத்தி தொழிற்சாலைகள், கட்டுமான தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில் அமைப்புகளுடன் கூட்டமைத்து செயல்படும் நிறுவனமாகும்.
இதன் மூலம் மகளிர் தொழில் முனைவோர் பயன்பெரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த TN-RISE நிறுவனத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். அந்த நிறுவனத்தின் லோகோ, அதற்கான இணையதளம் ஆகியவற்றை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கினார்.
இந்த தொடக்க நிகழ்வின் போது TN-RISE நிறுவனத்துடன் ஸ்விகி, பிளிப்கார்ட் உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பதிவு செய்துள்ளன. மகளிர் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை அதிகரிக்கும் நோக்கிலும், கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…