குடியுரிமை மசோதாவை கிழித்தெறிந்த திமுகவினர் – உதயநிதி ஸ்டாலின் கைது
- குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் நகலை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதா முதலில் நாடாளுமன்றத்தின் அவைகளில் ஒன்றான மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.இந்த மசோதாவிற்கு மக்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.ஆனால் வாக்கெடுப்பின் போது மசோதாவிற்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்த நிலையில் மசோதா மக்களவையில் நிறைவேறியது.பின்னர் மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேறியது.ஆனால் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு வடமாநிலங்களில் கடுமையாக எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
இந்த நிலையில் இன்று குடியுரிமை மசோதாவை எதிர்த்து திமுக இளைஞரணி சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவினர்கள் பங்கேற்றனர்.அப்போது குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் நகலை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் ஈடுபட்டனர்.பின்னர் போலீசார் உதயநிதி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை கைது செய்தனர்.இதனால் அந்த இடத்தில் போலீசார் மற்றும் திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.