இன்று இரண்டாவது நாளாக நடைபெற்ற பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 5 மாதங்களில் நடைபெற உள்ளது.அதனை தொடர்ந்து 100 நாள் பிரச்சாரத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி அறிவித்தார்.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் நேற்றைய தினம் தனது தேர்தல் பிரச்சாரத்தை கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையிலிருந்து தொடங்கி வைத்தார்.இதில் பங்கேற்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் ஊரடங்கு விதிகளை மீறியதாக கூறி போலீசார் கைது செய்தனர். பின்னர், சிறிது நேரம் கழித்து உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவினர் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மீண்டும் தனது இரண்டாவது நாள் பிரச்சாரத்தை நாகப்பட்டினத்தில் உள்ள அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்திலிருந்து தொடங்கிய உதயநிதி,
அங்குள்ள மீனவர்களை சந்தித்து பேசி அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார் . அதனையடுத்து அங்குள்ள மீனவரின் மீன்பிடிப் படகில் ஏறி சிறுது தூரம் கடலுக்குள் சென்று விட்டு கரை திரும்பிய அவர் பிரச்சாரத்தை தொடங்கினார் .
அப்போது 200-க்கும் மேற்பட்ட போலீசார் உதயநிதி மற்றும் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர்கள் எம்ஆர்.கே.பன்னீர்செல்வம், மதிவாணன், வேளாங்கண்ணி பேரூராட்சி முன்னாள் தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ் விஜயன் உள்ளிட்ட பல திமுக முன்னணிப் பிரமுகர்களை தடுத்து நிறுத்திக் கைது செய்துள்ளனர்.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…