வெகு விரைவில் உதயநிதி அமைச்சராக வரவேண்டும் – அமைச்சர் மூர்த்தி
உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முதல்வரை போலவே சிறப்பாக செயல்படுவதாக அமைச்சர் மூர்த்தி பேட்டி.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 103 இடங்களில், ரூ.16 கோடி மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணியை தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வினை தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முதல்வரை போலவே சிறப்பாக செயல்படுவதாகவும், திமுக வெற்றிக்காக இரவு பகலாக பாடுபட்டவர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், உதயநிதி ஸ்டாலின் அனைவரும் பாராட்டும் அளவிற்கு செயல்பட்டு வருகிறார். வெகுவிரைவில் உதய நிதி அமைச்சராக வர வேண்டும் தமிழ்நாடு முழுவதும் அமைச்சராக அவரது பணி தொடர வேண்டும் எ என்றும் தெரிவித்துள்ளார்.