உதயநிதியின் பிரச்சாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறுகையில்,அவரின் பிரச்சாரத்தை தாங்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 5 மாதங்களில் நடைபெற உள்ளது. தொடர்ந்து 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் உள்ளது. இந்த தேர்தல் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தல் ஆகும். இதனால், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியயை அமைக்க போவது யார்..? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இதைத்தொடர்ந்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளன.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.ஆகவே சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து 100 நாள் பிரச்சாரத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது.அதாவது திமுக சார்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் தங்களது பிரச்சாரத்தை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ,உதயநிதி ஸ்டாலின் கடந்த 20-ஆம் தேதி முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.ஆனால் தற்போது நிவர் புயல் காரணமாக பிரச்சாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உதயநிதியின் பிரச்சாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறுகையில்,உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரத்தை தாங்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை என தெரிவித்துள்ளார்.வேல் யாத்திரைக்கு பெருகிய ஆதரவை பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் உதயநிதி பரப்புரையை தொடங்கியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…