34-வது மாவட்டமாக உதயமானது கள்ளக்குறிச்சி – தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
தமிழகத்தின் 34-வது மாவட்டமாக உதயமானது கள்ளக்குறிச்சி.
விழுப்புரம் மாவட்டம் பெரிய மாவட்டமாக இருப்பதால் நிர்வாக வசதிக்காக கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்தார் முதலமைச்சர் பழனிசாமி.இந்த நிலையில் இன்று தமிழகத்தின் 34-ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமானது.இன்று கள்ளக்குறிச்சியின் புதிய மாவட்ட துவக்க விழா கள்ளக்குறிச்சியில் சாமியார்மடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டு கள்ளக்குறிச்சியின் மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை தொடங்கி வைத்தார். இந்த விழாவில், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக கிரண் குராலா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.