கொடநாடு விவகாரம் நடந்து முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது – துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
கொடநாடு விவகாரம் நடந்து முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில்,கொடநாடு விவகாரம் நடந்து முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது.சக்தியற்ற எதிர்க்கட்சிகள் இதுபோன்ற அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனே கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து அறிவிக்கப்படும் .அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்புகின்றன.பொய்யான குற்றச்சாட்டுகளை அரசு எதிர்கொள்ளும்.பியூஷ் கோயல் அதிமுகவுடன் பேசுவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.