தந்தையின் நினைவாக வைத்திருந்த இருசக்கர வாகனம் களவு போனதால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை!

Default Image

தியாகராஜன் என்பவர், சென்னை புரசைவாக்கம், தாண்டவராயன் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு வயது 21. இவர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு செல்போன் கடையில் பணிப்புரிந்து வருகிறார். இவரது குடும்பம் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பம். 

இருப்பினும், தனது மகனின் விருப்பப்படி, உயர் ரக R15 இரு சக்கரவாகனத்தை ரூபாய் 1 லட்சத்து 60 ஆயிரம் கொடுத்து அவரது தந்தை வாங்கிகொடுத்துள்ளார். இந்நிலையில், அவரது தந்தை சில மாதங்களில் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். 

இதனையடுத்து, தியாகராஜன், தனது தந்தையின் நினைவாக, அவர் வாங்கி கொடுத்த இருசக்கர வாகனத்தை மிகவும் பாதுகாப்பாக வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் 5-ம் தேதி, தனது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, தியாகராஜன் வேப்பரி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இதுதொடர்பாக காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் உதவிகளோடு குற்றவாளிகளை தேடி வந்தனர். இதனிடையே கொரோனா பாதிப்பு காரணமாக வழக்கில் தொய்வு ஏற்பட்ட நிலையில் குற்றவாளிகளை பிடிக்க காலதாமதம் ஆகியுள்ளது. 

இந்நிலையில், கடந்த ஒருமாத காலமாக இருசக்கர வாகனம் திருடு போனதால், மன உளைச்சலில் இருந்த தியாகராஜன் இன்று நண்பகல் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பரி போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி, ராஜிவ்காந்தி மருத்துவனையில் பிரேத பரிசோனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னதாக, அப்பாவின் நினைவாக இருந்த இரு சக்கரவாகனம் தொலைந்ததால், மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலை முயன்று காப்பாற்றியதாகவும், பின்னர் போலீசார் ஊரடங்கு முடிவடைந்ததும் நிச்சயமாக  இருசக்கரவாகனத்தை கண்டுபிடித்து தருவதாக கூறியிருந்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்