கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு இருவர் ஆஜர்!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட மனோஜ்சாமி, சந்தோஷ் சாமியிடம் காவல்துறையினர் விசாரணை.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணைக்கு மனோஜ்சாமி, சந்தோஷ் சாமி ஆகியோர் ஆஜராகியுள்ளனர். தனிப்படை சம்மன் அனுப்பியதை அடுத்து, இருவரும் உதகையில் உள்ள பழைய எஸ்பி அலுவலகத்தில் ஆஜராகினர்.
இதனைத்தொடர்ந்து இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் 8 மற்றும் 9வது நபர்களாக குற்றச்சாட்டப்பட்ட இருவரும் கேரளாவை சேர்ந்தவர்கள். ஜாமீனில் உள்ள நிலையில், தற்போது விசாரணைக்கு ஆஜராகி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.