BREAKING :வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரை 10 நாள் காவலில் விசாரிக்க அனுமதி.!
- கடந்த 8-ம் தேதி இரவு காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (57) கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
- கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் அப்துல் சமீம், தஃபீக்கை இருவரையும் 10 நாள்கள் போலீசார் காவலில் வைத்து விசாரிக்க நாகர்கோவில் நீதிமன்றம் அனுமதி கொடுத்து உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8-ம் தேதி இரவு காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (57) கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட அப்துல் சமீம், தவுபிக் என்ற இரு தீவிரவாதிகள் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட தீவிரவாதிகள் 2 பேரையும் இன்று நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது தீவிரவாதிகள் அப்துல் சமீம், தஃபீக்கை 28 நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி தீவிரவாதிகள் அப்துல் சமீம், தஃபீக்கை இருவரையும் 10 நாள்கள் போலீசார் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு நாகர்கோவில் நீதிமன்றம் அனுமதி கொடுத்து உள்ளது.