சிவகங்கையில் தனது மனைவியை மதுபோதையில் தவறாக பேசிய தந்தையை வெட்டி கொன்ற இரு மகன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி என்னும் பகுதியில் வசித்து வரக்கூடிய கணேசன் என்பவருக்கு பழனிச்சாமி, கார்த்தி சாமி என இரு மகன்கள் உள்ளனர். கணேசன் எப்பொழுதுமே மது அருந்திவிட்டு இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்து அருகில் இருப்பவர்களிடம் தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல நேற்று இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த கணேசன் தனது மகன் பழனிசாமியின் மனைவியிடம் தகராறு செய்து அவரை சில தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கணேசனின் இளைய மகன் பழனிசாமி தனது சகோதரருடன் இணைந்து தனது தந்தை கணேசனை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தந்தையை கொலை செய்த மகன்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கார்த்தி சாமி மற்றும் பழனிசாமி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும், இவர்களிடம் இந்த கொலை சமன்பாவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…