சேலத்தில் தொற்று பாதிப்பை உயர்த்தி காட்டிய இரண்டு தனியார் கொரோனா ஆய்வகங்களுக்கு சீல்…!
சேலத்தில் தொற்று பாதிப்பை உயர்த்தி காட்டிய இரண்டு தனியார் கொரோனா ஆய்வகங்களுக்கு சீல்.
சேலம் ஒருக்காணி வளாகத்தில் 500 ஆக்சிஜன் வசதிகளோடு கூடிய, கொரோனா சிறப்பு மையத்தின் கட்டுமான பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், தொற்று முடிவுகளை உயர்த்தி காண்பித்த இரண்டு தனியார் ஆய்வகங்களின் தொற்று மாதிரியை, அரசு மருத்துவக் கல்லூரியில் பரிசோதனை செய்ததில், அதில் கொரோனா பாசிட்டிவ் என காண்பிக்கப்பட்ட முடிவுகள், அரசு ஆய்வகத்தில் தொற்று இல்லை என தெரிய வந்ததாகவும், இதனையடுத்து அந்த இரண்டு தனியார் ஆய்வகங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இனிமேல் யாரும் இந்த இரண்டு தனியார் ஆய்வகங்களுக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டாம் என்றும், இனி தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். 98% தனியார் மருத்துவமனை மற்றும் தனியார் ஆய்வகங்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். 2% தனியார் மருத்துவமனை மற்றும் ஆய்வகங்கள் தான் தவறாக செயல்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.