செங்கல்பட்டு பாமக நிர்வாகி வெட்டி படுகொலை.! சுட்டுப்பிடித்த காவல்துறை.. இருவர் கைது.!

செங்கல்பட்டில் பாமக நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த பாமக நகர செயலாளர் நாகராஜ் நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவர் தாக்கப்பட்டதை கண்டதும், அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
நாகராஜ் உயிரிழப்பை தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது, பாமக கட்சியினர் மற்றும் உறவினர்கள் , நாகராஜை கொலை செய்த்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது.
நேற்று இரவு முதலே தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்ட காவல்துறையினர் அஜய் என்பவரை சுட்டுப்பிடித்துள்ளனர். காவல்துறையினர் அஜய்யை பிடிக்க முயலுகையில் கூறிய ஆயுதங்களால் காவல்துறையினரை அஜய் தாக்க முற்பட்டதாக தெரிகிறது. இதனால் தற்காப்புக்காக அஜய் காலில் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். தற்போது அஜய்க்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கொலை வழக்கில் தற்போது கார்த்தி என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாமக நிர்வாகி படுகொலையை தொடர்ந்து அசம்பாவிதங்களை தடுக்க செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்ப்பட்டுள்ளனர்.