நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல் புத்தகத்தை பறிமுதல் செய்த இருவர் தேர்தல் பணியிலிருந்து விடுவிப்பு

Default Image

நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல் என்ற புத்தகத்தை பறிமுதல் செய்த உதவி செயற்பொறியாளர் கணேஷ், உதவி ஆய்வாளர், காவலர்கள் இருவர் தேர்தல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 

ரபேல் விவகாரம்: 

முதலில் ரபேல் ஒப்பந்தத்தை முன்னெடுத்தது  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அரசு தான்.அதன் பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் 2015-ஆம் ஆண்டு ஏப்ரலில் பிரதமர் மோடி 36 ரபேல் விமானங்கள் மட்டும் வாங்கப்போவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.மேலும் 126 விமானங்களுக்கான முந்தைய ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது என்று அறிவித்தார் அன்றைய பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பாக இருந்த மனோகர் பாரிக்கர்.அவர்  முன்னிலையில் 2016 செப்டம்பரில் ரிலையன்ஸ்-டஸ்ஸால்ட் நிறுவனங்களுக்கிடையில் ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தானது.

Related image

இந்த ஒப்பந்தம் கையெழுத்தான நாளில் இருந்தே காங்கிரஸ் பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றது.நரேந்திர மோடியின் அரசு ஆயுதங்கள் கொள்முதல் செய்வதில் நாடாளுமன்ற நிலைக்குழு, டெண்டர், தொழில்நுட்பக் குழு, மதிப்பீடு, பரிசீலனை என எதுவுமே இல்லாமல் தன்னிச்சையாக முடிவு அறிவிக்கப்பட்டதாகவும்  காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினார்கள்.

அதற்கு பிறகு காங்கிரஸ் கட்சியினர் போர் விமானம் குறித்த தொழில்நுட்பம் தான் இரகசியம்  காக்கபடவேண்டும்.அதன் விலை அல்ல என குற்றம் சாட்டியது.இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட அப்போதைய பிரான்ஸ் பிரதமர் பிரான்சுவா ஆலந்து ரிலையன்ஸ் தான் கூட்டணியில்  இருக்க வேண்டும் என்று இந்திய அரசு வற்புறுத்தியதால் எங்களுக்கு வேறு வாய்ப்பு இருக்கவில்லை கூறியது மேலும் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாரதி புத்தகாலயம் ரபேல் ஒப்பந்தத்தில் ஏற்பட்ட  முறைகேடு குறித்து   “நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்” என்ற பெயரிலான புத்தகத்தை  நேற்று  வெளியிடுவதாக  அறிவித்திருந்தது.இந்த புத்தகத்தை எழுத்தளார் எஸ்.விஜயன் எழுதியுள்ளார்.

அதேபோல்  இந்து பத்திரிக்கையின் மூத்த பத்திரிக்கையாளர் என்.ராம் புத்தகத்தை  வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தேர்தல் நடந்தை விதி காரணமாக இந்த புத்தகத்திற்கு தடை விதித்ததாக தேர்தல் ஆணையம் தெரிவிக்கப்பட்டது.மேலும்  இந்த விழாவிற்கு தடை விதித்தும் 146 புத்தகங்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துவிட்டு சென்றனர்.இதனால் விழா நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Image result for நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்

ஆனால் இது தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரி சாகு விளக்கம் அளித்தார்.அவர்  கூறுகையில்,புத்தகத்தை பறிமுதல் செய்யக்கோரி எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை,இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.இதன் பின்னர் “நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்”  புத்தகம் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல் என்ற புத்தகத்தை பறிமுதல் செய்த உதவி செயற்பொறியாளர் கணேஷ், உதவி ஆய்வாளர், காவலர்கள் இருவர் தேர்தல் பணியிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்