விருதுநகர்:சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை பகுதியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரி 1 ஆம் தேதி சிவகாசி களத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.இந்த நிலையில்,விருதுநகர் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை பகுதியில் மஞ்சள்ஓடைப்பட்டியில் உள்ள சோலை என்ற பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.இன்று காலை பட்டாசு ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த 5 பேர் வெடிவிபத்தில் சிக்கியதாக தகவல் வெளியானது.
இந்த தகவல் அறிந்து,தீயை அணைப்பதற்காக சாத்தூர்,வெம்பக் கோட்டையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.இதனைத்தொடர்ந்து,ஆலையில் சிக்கிய 7 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு,சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில்,சாத்தூர்,கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 7 பேரில்,2 பேர் உயிரிழந்துள்ளனர். ஆலையின் உரிமையாளர் கருப்பசாமி மற்றும் செந்தில்குமார் உள்ளிட்ட 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து,ஆலையில் மேலும் சிலர் சிக்கியுள்ளார்களா? என்று தீயணைப்பு படையினர் தொடர்ந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…
டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.…