இரண்டு புதிய கட்சிகள் பதிவு., ஆட்சேபனை இருந்தால் கூறலாம் – தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் இருந்து 2 புதிய கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் இருந்து புதிதாக இரண்டு கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் ராஜ்ய கட்சி என இரண்டு புதிய காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய கட்சிகளின் பதிவு குறித்து ஜனவரி 7-ஆம் தேதிக்குள் எதாவது ஆட்சேபணைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, இன்னும் ஒருசில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஜெயலலிதா மற்றும் கலைஞர் போன்ற முக்கிய தலைவர்கள் இல்லாமல் முதல் முறையாக நடைபெறவுள்ளது. இதனால் அடுத்தாண்டு தேர்தலில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதிமுக – திமுக இரு திராவிட கட்சிகள் நேரடியாக போட்டி போட்டு வருகிறது.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரனின் அம்மா முன்னேற்ற கழகம் மற்றும் முக அழகிரி புதிய கட்சி தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த புதிய கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், கட்சி தொடங்கவில்லை என அறிவித்துவிட்டார். தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிகளவு புதிய கட்சிகள் இடம்பெறவுள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலில் அதிக புதிய கட்சிகள் போட்டியிட உள்ளதால் வாக்குகள் சிதறப்படும் என்று கூறப்படுகிறது.