இரு புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டவுள்ள முதல்வர்.!
தமிழகத்தில் வருகின்ற திருப்பூர் மற்றும் திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டவுள்ளார்.
மத்திய அரசு தமிழகத்தில் புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை அமைக்க ஒரே நேரத்தில் 9 கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளித்தது. அதன்படி, புதிய அரசு மருத்துவ கல்லுரிகளுக்கு முதல்வர் பழனிசாமி நேரடியாக சென்று அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் 2 கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்ட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், வருகின்ற 18 ஆம் தேதி திருப்பூருக்கும், 19 ஆம் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரிக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டவுள்ளார். இந்நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.