ஹிஜாவு மோசடி வழக்கில் மேலும் இருவர் கைது!
ஹிஜாவு நிறுவன மோசடி வழக்கில் அதன் இயக்குநர்களில் ஒருவரான சுஜாதா காந்தா அவரது கணவர் கைது.
ஹிஜாவு நிறுவன மோசடி வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, ஹிஜாவு நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான சுஜாதா காந்தா மற்றும் அவரது கணவர் கோவிந்தர்ராஜூலுவை குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது.
சுஜாதா காந்தா ஹிஜாவு நிறுவனத்தின் இயக்குநராக இருந்தது தெரிய வந்துள்ளது. சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த ஹிஜாவு நிறுவனம் ரூ.4,400 கோடி வசூலித்து மோசடி செய்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது.
ரூ.75.6 கோடி அசையா சொத்துக்களும், ரூ.90 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்று, 8 கார்கள், 162 வங்கி கணக்கில் இருந்த ரூ.14.47 கோடி பணம் மூடப்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், வெளிநாட்டிற்கு தப்பிய அலெக்ஸாண்டர், இயக்குனர் மகாலட்சுமியை பிடிக்க ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.