தமிழக குடியரசு தின விழாவில் இரண்டு சிறிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.
நாடு முழுவதும் இன்று 74வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கு டெல்லி செங்கோட்டை முதல் தமிழ்நாடு மெரினா கடற்கரை வரை மத்திய மாநில அரசுகள் ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வந்துள்ளது. தமிழக அரசு சார்பாக நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கொடி ஏற்றி வைக்க உள்ளார்.
மெரினா கடற்கரை சாலை : இந்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின விழாவில் சில முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதாவது ஆண்டுதோறும் சென்னை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே தான் குடியரசு தின விழா கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை முன்பு தமிழக அரசு சார்பில் குடியரசு தின விழா நடைபெற உள்ளது.
அணிவகுப்பில் மாணவர்கள் : இந்த குடியரசு தின அணிவகுப்பில் தேசிய மாணவர் படை மத்திய தொழில்பாதுகாப்பு படை, காவல்துறை தீயணைப்புத்துறை என அனைவருக்கும் ஒத்திகையில் பங்கேற்றுள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக கலை நிகழ்ச்சி மற்றும் அணிவகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்காமல் இருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குடியரசு தின விழாவில் மாணவர்களின் பங்களிப்பு இந்த ஆண்டு இருந்துள்ளது.
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…