இந்த உலகில் ஆண்களுக்கும் பாதுகாப்பில்லை!ஒரு ஆண் ஓரின சேர்க்கையில் ஈடுபட மறுத்ததால் கொலை செய்த இரு ஆண்கள்!

வேலூர் மாவட்டத்தில் உள்ள வெலக்கல் நத்தம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் ஆவார்.சுமார் 20 வயதான இவருக்கு வாட்ஸ் அப் மூலம் கார்த்திக்,பாலாஜி என்ற இருவர் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஜூலை 13-ம் தேதி அன்று கார்த்திக் ஆனந்தை நாட்றம்பள்ளிக்கு வர சொல்லி கார்த்திக் அழைப்பு விடுத்துள்ளார்.பின்னர் நண்பர்கள் அழைப்பு விடுத்ததை அடுத்து அந்த பகுதிக்கு ஆனந்த் வந்துள்ளார்.
பிறகு பாலாஜியும் கார்த்திக்கும் சேர்ந்து ஆனந்திடம் பாலியல் ரீதியான ஓரின சேர்க்கையில் தங்களுடன் ஈடுபடுமாறு வற்புறுத்தியுள்ளனர்.பின்னர் ஆனந்த் அதை மறுத்துள்ளார்.உடனே ஆத்திரம் அடைந்த பாலாஜியும் கார்த்திக்கும் சேர்ந்து அவரை கொலை செய்துள்ளனர்.
பின்னர் ஆனந்தின் உடலை பச்சூர் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் வீசிச்சென்றுள்ளனர்.அவரது உடலை மீட்ட ரயில்வே காவல்துறை அதிகாரிகள் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று எண்ணியுள்ளனர்.
பின்பு ஆனந்தின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.அங்கு அவரது உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது கழுத்தை யாரோ நெரித்திருப்பதை கண்டு இது கொலை என்று உறுதி செய்துள்ளனர்.
இதன் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.பின்னர் ஆனந்தின் செல்போனை சோதனை செய்த காவத்துறையினருக்கு ,பாலாஜி,கார்த்திக் இருவரும் சேர்ந்து கொலை செய்துள்ளது தெரியவந்தது.
இதன் அடிப்படையில் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
மகளிர் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி… தென்னாப்பிரிக்காவை 82 ரன்களில் சுருட்டிய இந்தியா.!
February 2, 2025
கடைசி டி20 போட்டி: இந்தியா – இங்கிலாந்து இன்று மோதல்.!
February 2, 2025
“ஈரோடு இடைத்தேர்தல் நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்கள்” – முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
February 2, 2025
2ம் ஆண்டில் தவெக… கொள்கைத் தலைவர்களின் சிலையை திறந்து வைத்த விஜய்.!
February 2, 2025