விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருச்சுழி நரிக்குடி கிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ளவர்கள் விவசாயத்தை தொழிலாக செய்து வருகின்றனர்.
தற்போது பெய்து வரும் மழையால் விவசாய நல்ல நடந்து வந்தாலும் காட்டு பன்றி பயிர்களை சேதப்படுத்துவதும் , தங்களையும் தாக்குவதாகவும் விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நரிக்குடி நாலூரை சார்ந்த முத்துப்பாண்டி 25 , ராஜ்குமார் 21 ஆகியோர் தங்களின் விவசாய நிலத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது அங்கு புதரில் இருந்த காட்டுப் பன்றி ஒன்று இருவர் மீது பாய்ந்து தாக்கியது. இதில் முத்துப்பாண்டி கால்களை காட்டு பன்றி கடித்து குதறியது. முத்துப்பாண்டியை கடிப்பதை பார்த்த ராஜ்குமார் காட்டுப்பன்றி விரட்ட முயற்சி செய்தார். அதனால் ராஜ்குமார் விரலையும் கடித்துள்ளது.
இருவரின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து காட்டுப்பன்றியை விரட்டியடித்தனர். அவர்களை மீட்டு அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…