மீட்பு பணிக்காக பஞ்சாபில் இருந்து அனுபவம் வாய்ந்த இரண்டு விவசாயிகள் வருகை..!
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் மீட்கும் பணி 75 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறுவன் சுர்ஜித்தை மீட்க அரசு பல முயற்சிகள் செய்து வருகிறது.
இந்நிலையில் குழந்தை மீட்பில் பணியில் அதிக அனுபவம் வாய்ந்த இரண்டு பஞ்சாப் விவசாயிகள் மீட்பு பணிக்காக நடுகாட்டுபட்டிக்கு வரஉள்ளனர். இன்று இரவு 11.30 மணிக்கு திருச்சி விமானநிலையம் வருகின்றனர். அந்த இரண்டு பேரையும் விமானநிலையத்தில் இருந்து நடுகாட்டுபட்டிக்கு அழைத்து வரப்படுகின்றனர். இவர்கள் இருவரும் எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி ஏற்பாட்டில் பஞ்சாப்பில் இருந்து வருகின்றனர்.