இரண்டு நாள் ஸ்தம்பிக்க போகும் சென்னை போக்குவரத்து! எந்தெந்த வழியாக செல்லலாம்?! செல்ல கூடாது?!

Default Image

சென்னை விமான நிலையம் முதல் கத்திபாரா வழியாகவும், கத்திபாரா முதல் சின்னமலை வழியாகவும் உள்ள அண்ணா சாலை ,சர்தார் வல்லபாய் படேல் சாலை, ராஜீவ்காந்தி சாலை, ஈசிஆர் போன்ற சாலைகளில் கனரக சரக்கு வாகனங்கள், இலகு ரக சரக்கு வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை அக்டோபர் 11 (இன்று ) மற்றும் 12 வெள்ளி, சனி காலை 6 மணி முதல் 11 மணி வரை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
அடுத்ததாக அக்டோபர் 11 இன்று வெள்ளிக்கிழமை மதியம் 12 30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பெருங்களத்தூரில் இருந்து சென்னைக்கு உள்ளே வரும் வாகனங்கள் அனைத்தும் சந்திப்பில் இருந்து வழி மாற்றப்பட்டு மதுரவாயல் பைபாஸ் வழியாக நகருக்குள் செல்ல திருப்பி விடப்படும். அதேபோல தென் சென்னை பகுதியில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் பல்லாவரம் ரேடியல் சாலை வழியாக அதே மதுரவாயல் பைபாஸிற்கு திருப்பி திருப்பி விடப்படும்.
அக்டோபர் 11 வெள்ளிக்கிழமை (இன்று ) பிற்பகல் 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஜிஎஸ்டி சாலையில் வரும் எல்லா வாகனங்களையும் 100 அடி சாலைக்கு திருப்பி விடப்படும்.
அக்டோபர் 11 வெள்ளிக்கிழமை (இன்று ) பிற்பகல் 3.30 மணி முதல் 4.30 மணி வரை மற்றும் அக்டோபர் 12 சனிக்கிழமை காலை 7 மணி முதல் 2 மணி வரையும், ராஜீவ் காந்தி சாலை வழியாக சென்னை நகருக்குள் வரும் வாகனங்கள் சோழிங்கநல்லூர் சந்திப்பின் மூலம்  பெரும்பாக்கம் வழியாக சென்னை நகருக்குள் செல்ல திருப்பி விடப்படும். ஈசிஆர் வழியாக வரும் அனைத்து வாகனங்களும் முட்டுக்காடு நோக்கி செல்ல அனுமதி கிடையாது. என சென்னை போக்குவரத்து சார்பாக ஆறிவிக்கப்பட்டுள்ளதாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்