இரண்டு நாட்களுக்கு பிறகு கிணற்றில் இருந்து உயிருடன் வந்த மூதாட்டி!

சேலம் மாவட்டம், கெங்கவல்லியை அடுத்த கூடமலை பகுதியை சேர்ந்தவர் வள்ளியம்மாள். இவரது கணவர் உயிரிழந்த நிலையில், இவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இதனையடுத்து, கடந்த 2 நாட்களாக வள்ளியம்மாள் வீட்டிற்கு வரவில்லை. இதனையறிந்த உறவினர்கள் அவரை தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில், ஆடு மேய்த்து சென்ற ஒருவர், கூடமலை கிராமத்தில் உள்ள வறண்ட கிணற்றில் ஒரு மூதாட்டி தவித்த வருவதாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலின் பெயரில், அந்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, மூதாட்டியை கயிறு வாயிலாக மீட்டெடுத்தனர்.
இந்த முதாட்டிக்கு அவ்வப்போது மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படும் நிலையில், கடந்த ஞாயிறுக்கிழமை அன்று இவர் கிணற்றில் விழுந்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர். 40 அடி ஆழம் கொண்ட வறண்ட கிணற்றில் விழுந்த மூதாட்டியை, சிறிய காயங்களுடன் மீட்டெடுத்து, ஆத்தூர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு.!
April 28, 2025