ஓசூர் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு..!
ஓசூர் அருகே பாகலூர் ஏரியில் குளிக்க சென்ற ஐந்து சிறுவர்களில் 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் ஏரியில் குளிக்க சென்ற ஐந்து சிறுவர்களில் 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீரில் மூழ்கி இறந்த சிறுவர்கள் சஷாந்த், வினோத் சிங் ஆகியோரின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தான், சென்னை மூவரசம்பேட்டையில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயில் தீர்த்தவாரியில் 5 பேர் மூழ்கி உயிரிழந்தனர். அந்த சோகமே இன்னும் மறையாத நிலையில், தற்போது 2 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.