ஒரே நேரத்தில் இரண்டு..கண்ணை கட்டிக்கொண்டு பியானோ வாசித்து அசத்திய லிடியன் நாதஸ்வரம்!
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில், ஒரே நேரத்தில் இரு பியானோவில் தெறிக்கவிட்ட லிடியன் நாதஸ்வரம்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா பிரமாண்டமாகவும், கோலகமாகவும் நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டு வேஷ்டி, பட்டு சட்டையுடன் வந்திருக்கிறார். இவ்விழாவில் நடிகர்கள் ரஜினி, கார்த்தி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் பங்கேற்றுள்ளனர். சர்வதேச நாடுகளின் கொடி அணிவகுப்பைத் தொடர்ந்து, இந்தியாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் பாரம்பரிய நடனங்கள் அரங்கேற்றப்பட்டது.
உத்தரப் பிரதேசத்தின் கதக், ஆந்திராவின் குச்சிப்புடி ஆகிய நடனங்கள் கலைஞர்களால் ஆடப்பட்டு வருகிறது. 8 பாரம்பரிய நடனங்களை நாட்டியக்கலைஞர்கள் நடனமாடி அசத்தினர். கண்ணை கவரும் மணல் ஓவியங்களை வரைந்து சாகசம் புரிந்தார் ஓவியர் சர்வம் படேல். இதன்பின் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிக்கான தீம் நாமெல்லாம் ஒன்று என்ற மையக்கருத்தை வைத்து இசை நிகழ்ச்சி அசத்தலாக நடைபெற்றது.
இளம் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, கண்களைக் கட்டிக்கொண்டு பியானோக்களை வசித்து அரங்கத்தை அதிரவைத்தார். பிறந்த இரண்டு பியானோக்களை ஒரே நேரத்தில் இசைத்தார் லிடியன் நாதஸ்வரம், Harry Potter , Mission Impossible, மிஸ்டர் பீன், பைரேட்ஸ் ஆப் தி கரீபியன், டைட்டானிக் உள்ளிட்ட பிரபல தீம் மியூசிக்குகளை இசைத்து ரசிக்க வைத்தார். லிடியன் நாதஸ்வரம் இசைக்கும் பியானோ இசை அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. அங்கு வந்திருந்த அனைவரையும் கவர்ந்து இழுத்து, அரங்கமே நின்று பாராட்டியது.