திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ கார் உடைப்பு சம்பவம் தொடர்பாக இருவர் கைது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தட்டார்மடம் எனும் பகுதியில் செல்வன் என்பவரின் குடும்பத்தாருக்கும் அந்த பகுதியில் உள்ள அதிமுக மாவட்ட வர்த்தக அணி செயலாளர் திருமண வேலு என்பவருக்குமான நிலத்தகராறில் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்வன் அடித்துக் கொல்லப் பட்டுள்ளார். இதனால் செல்வனின் குடும்பத்தார் நியாயம் கேட்டு கடந்த 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செல்வத்தின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினரான அனிதா ராதாகிருஷ்ணன் என்பவர் அவர்களோடு கூட இணைந்து போராட்டத்திலும் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் இன்று நள்ளிரவில் அவரது வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளது.. இந்த சம்பவம் தொடர்பாக அனிதா ராதாகிருஷ்ணன் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்பொழுது திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏ அனிதா அவர்களின் கார் உடைப்பு சம்பவம் தொடர்பாக ஜின்னா, செல்வநாயகம் ஆகிய 2 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…