டாஸ்மாக் இல்லாததால் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது!

Default Image

நெல்லையில் வீட்டில் வைத்து கள்ள சாராயம் காய்ச்சிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு தளர்வுகளற்ற ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த ஊரடங்கின் பொழுது அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் முதற்கொண்டு அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. மதுபான கடைகளும் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி கேட்டு பல மதுபிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிலர் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சும் முயற்சிகளிலும் ஈடுபட்டு தொடங்கியுள்ளனர்.

நெல்லையில் உள்ள உள்ள சி.என் கிராமம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாகவும், சாராய நாற்றம் வருவதாக அந்த பகுதியில் உள்ள மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நெல்லை சந்திப்பு காவல்துறையினர் அந்த வீட்டிற்கு சென்று கதவை தட்டியதும், போலீசார் வெளியில் இருப்பதை கண்ட வீட்டுக்குள் இருந்த இருவர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். அவர்களை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்துள்ளனர். பின்னர் பிடிபட்ட நபர்களிடமும் நடத்திய விசாரணையில் அவர்களது பெயர் உடையான் மற்றும் சூரியமூர்த்தி என்பது கண்டறியப்பட்டது.

பின் அவர்கள் வீட்டை சோதனை செய்து கள்ள சாராயம் தயாரிக்கும் முயற்சியில் இருவரும் ஈடுபட்டிருந்த தெரிய வந்ததுடன், அதற்காக போடப்பட்டிருந்த ஊர்களில் இருந்து வெளியே வந்த நாற்றம் காரணமாகத்தான் பக்கத்துக்கு வீட்டுக்காரர்களுக்கு தெரிய வந்துள்ளது எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் கள்ளச்சாராயம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்ததுடன் உடையார் மற்றும் சூரிய மூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். சாராயம் குடிக்காமல் இருந்ததால் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், இதனால் தான் கள்ள சாராயம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியதாகவும் அவ்விரவரும் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்