சென்னைக்கு வந்த பிரதமர் மோடி ! போட்டி போட்டு ட்ரெண்டாகும் #gobackmodi,#TNWelcomesModi ஹாஸ்டேக்
பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாகவும்,எதிராகவும் சமூக வலைத்தளமான ட்விட்டரில் ஹாஸ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி ஐஐடியில் நடைபெறும் விழாவில் பங்கேற்க இன்று சென்னை வந்தடைந்தார்.இதனையொட்டி சமூக வலைத்தளமான ட்விட்டரில் #gobackmodi என்ற ஹாஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.இந்திய அளவில் இந்த ஹாஸ்டேக் முதல் இடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
அதேபோல் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக #TNWelcomesModi என்ற ஹாஸ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது.இந்த ஹாஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது