தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இருமுறை சுழற்சி வகுப்புகள் ரத்து?
தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இருமுறை சுழற்சி வகுப்புகள் ரத்து.
தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், காலை மற்றும் மதியம் என இரு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, தற்போது, கல்லூரி கல்வி இயக்கம், இந்த இரு சுழற்சி முறை வகுப்புகளை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளது.
கல்லூரிக்கு காலையில் செல்லும் மாணவர்கள், காலை 7:30 மணிக்கெல்லாம் செல்வதால், கிராமப்புறத்தில் இருந்து வரும் மாணவர்கள் காலை உணவை தவிர்த்து விடுகின்றனர். இதனால், மாணவர்கள் இரத்த சோகை நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு, இந்த இரு சுழற்சி முறை வகுப்பினை ரத்து செய்து, 2006-க்கு முன்பிருந்த நிலையை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.