நமக்கு நிறைய நல்ல தலைவர்கள் தேவை! த.வெ.க தலைவர் விஜய் பேச்சு!

Published by
பால முருகன்

சென்னை : விஜயின் த.வெ.க. கட்சி சார்பில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், தொகுதி வாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை கொளரவிக்கும் விதமாக கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் தொடங்கியுள்ளது.

இந்த விழாவில், முதற்கட்டமாக 800 மாணவ, மாணவிகளுக்கு சால்வை அணிவித்து ஊக்கத்தொகை வழங்கி விஜய்  கௌரவித்து வருகிறார்.  நிகழ்ச்சிக்கு வருகை தந்தை த.வெ.க. தலைவர் விஜய் மேடையில் பேசியதாவது ” சாதனை படைத்த உங்களை பார்க்கும் போது நேர்மறை எண்ணம் எனக்குள் அதிகரிக்கிறது. பாசிட்டிவான பவர் மக்களிடம் இருப்பதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

எல்லா துறையும் நல்ல துறைதான். ஆனால் உழைப்பு என்பது மிகவும் முக்கியமான விஷயம். உழைப்பு இருந்தால் கண்டிப்பாக எல்லா துறைகளிலும் வெற்றி நிச்சியம் தான். தமிழகத்தில் உலகத்தரத்தில் இன்ஜினியர், வக்கீல் என பலர் இருக்கிறார்கள். இங்கு நம்மகிட்ட என்ன இல்லை என்றால் நல்ல தலைவர்கள் இல்லை. நான் தலைவர்கள் சொன்னது என்பது வெறும் அரசியல் ரீதியாக மட்டுமில்லை.

நீங்கள் ஒரு துறைக்கு செல்கிறீர்கள் என்றால் அந்த துறையில் சிறந்து விளங்குகிறீர்கள் என்றால் ஒரு தலைமை இடத்திற்கு ஈசியாக வர முடியும் அதைத்தான் நான் சொல்கிறேன். இன்னும் நமக்கு நிறைய நல்ல தலைவர்கள் தேவை. அது மட்டும் இல்லை வருங்காலத்தில் அரசியலும் வந்து ஒரு கேரியர் தேர்வாக  வரவேண்டும். அப்படி வரவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். உங்களை போல நல்லா படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்.

ஆனால், இப்போதைக்கு படிப்பு மட்டும்தான் முக்கியம் படிப்பில் நன்றாக கவனம் செலுத்துங்கள் அதேபோல் படிக்கும்போதே நீங்கள் மறைமுகமாக அரசியலை கற்றுக் கொள்ளலாம் தினமும் செய்தித்தாள்களை படித்தீர்கள் என்றால் படிக்க படிக்க உங்களுக்கே தெரியும்.

ஒரே செய்தியை ஒரு செய்தித்தாள் ஒரு மாதிரி எழுதுவார்கள் அதே செய்தியை இன்னொரு செய்தித்தாள் இன்னொரு மாதிரி எழுதுவார்கள். ஒரு செய்தியை முதல் பக்கத்தில் ஒரு சில செய்தித்தாள் ஹெட்லைனில் போடுவார்கள் அதே செய்தியை இன்னொரு செய்தித்தாள் கடைசி பேப்பரில் கூட போட மாட்டாங்க. இதனை வைத்து நீங்களே புரிந்து கொள்ளலாம்” எனவும் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

‘இனிமே இது தான்’…சிறுத்தையை தூக்கியெறிந்து லோகோவை மாற்றிய ஜாகுவார்!

டெல்லி : பல ஆண்டுகளாக, ஜாகுவார் நிறுவனம் பல்வேறு வகையான வாகனங்களை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தி வருகிறது. வருகின்ற 2026…

46 seconds ago

தமிழகத்தில் வியாழன் கிழமை (21/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : சூலக்கல், தாமரைக்குளம், ஓ.கே.மண்டபத்தின் ஒரு பகுதி, மந்திரம்பாளையம், கொண்டம்பட்டி, சிட்கோ, சுந்தராபுரம் பகுதி, போத்தனூர் பகுதி, எல்ஐசி…

14 mins ago

உ.பி இடைத்தேர்தலில் இஸ்லாமியர்கள் வாக்களிக்க இடையூறு? 7 போலீசார் சஸ்பெண்ட்!

லக்னோ : இன்று மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலும், ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப்பதிவும் இன்று…

28 mins ago

“நாங்களும் விவாகரத்து செய்கிறோம்”…ரஹ்மானின் கிட்டாரிஸ்ட் மோகினி தே அதிர்ச்சி அறிவிப்பு!

சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்துகொள்வதாக அறிவித்தது திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,…

52 mins ago

AUS vs IND : ரோஹித் இல்லை..இந்திய அணியால் வெல்ல முடியுமா? வெற்றி வியூகம் என்ன?

பெர்த் : இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்த ஆண்டிற்கான பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…

1 hour ago

சபரிமலை செல்பவரா நீங்கள்? இந்த முக்கிய ‘வாட்ஸ்அப் AI’ தகவல் உங்களுக்கு தான்!

திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்கி விட்டனர். மேலும், சபரிமலை…

2 hours ago