டிவிஎஸ் நிறுவனத்தில் வேலை பார்ப்பவரா நீங்கள்! உங்களுக்கான அதிர்ச்சி தகவல் இதோ!

டிவிஎஸ் நிறுவனமானது, கடந்த சில மாதங்களாக வியாபரத்தில் மந்தநிலை உருவாகியுள்ளது. உதிரிபாகங்கள் தயாரிக்க ஆகும் கூடுதல் செலவு, இறக்குமதி வரி அதிகரிப்பு, ஜிஎஸ்டி என பல காரணங்களால் தொழிற்சாலையை தொடர்ந்து இயக்க முடியாமல் ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பும் அவ்வப்போது கொடுக்கப்பட்டு வருகிறது.
டிவிஎஸ் நிறுவனத்தின் ஓர் அங்கமாக செயல்படும் டிவிஎஸ் லூகாஸ் நிறுவனமானது, சென்னை பாடியில் இயங்கி வருகிறது. இங்குதான், வேலைநாட்கள் குறைக்கப்பட்டு கட்டாய விடுப்பு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சில பிரிவுகளை மட்டும் இயக்கி மற்ற சில பிரிவு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு கொடுக்கப்பட்டு வருகிறதாம்.
ஒரு வேலை இந்த மந்த நிலை தொடர்ந்தால் ஊழியர்களுக்கு வேலை போகும் அபாயமும் இருக்கும் என அச்சநிலை உருவாகியுள்ளது.